கி.ரா.

சரியாக எட்டு வருடங்கள் ஆகின்றன, நான் அவரைச் சந்தித்து. நேற்று நேர்ந்தது. அதே புன்னகை. அதே அன்பான தோள் தட்டல். அதே நலன் விசாரிப்புப் பாணி. அதே ‘அழகிய’ சென்னைத் தமிழ். நல் ஊழ் மட்டுமே நல்ல ஆசிரியர்களை நமக்குக் கொண்டுவந்தளிக்கும். கி.ரா. என்கிற கி. ராஜேந்திரன் எனக்கு அம்மாதிரி. கார்ட்டூனிஸ்ட் மதியின் ‘அடடே’ புத்தக வெளியீட்டுக்கு அவரை அழைத்திருந்தோம். தம் மகளும் தற்போதைய கல்கி ஆசிரியருமான சீதா ரவியுடன் வந்திருந்தார். முதல் பார்வையில் என்னென்ன மாற்றங்கள் … Continue reading கி.ரா.